Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 745

நிணமொடு குருதி நரம்பு மாறிய

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - அங்கதாளம் (7 1/2)தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2தனதன தனன தனந்த தானனதனதன தனன தனந்த தானனதனதன தனன தனந்த தானனதனதான

Lyrics

நிணமொடு குருதி நரம்பு மாறியதசைகுடல் மிடையு மெலும்பு தோலிவைநிரைநிரை செறியு முடம்பு நோய்படுமுதுகாயம்

நிலைநிலை யுருவ மலங்க ளாவதுநவதொளை யுடைய குரம்பை யாமிதில்நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவமுயவோரும்

உ ணர்விலி செபமுத லொன்று தானிலிநிறையிலி முறையிலி யன்பு தானிலிஉ யர்விலி யெனினுமெ னெஞ்சு தானினைவழியாமுன்

ஒருதிரு மரகத துங்க மாமிசையறுமுக மொளிவிட வந்து நான்மறையுபநிட மதனை விளங்க நீயருள்புரிவாயே

புணரியில் விரவி யெழுந்த ஞாயிறுவிலகிய புரிசை யிலங்கை வாழ்பதிபொலமணி மகுட சிரங்கள் தாமொருபதுமாறிப்

புவியிடை யுருள முனிந்து கூர்கணையுறுசிலை வளைய வலிந்து நாடியபுயலதி விறலரி விண்டு மால்திருமருகோனே

அணிதரு கயிலை நடுங்க வோரெழுகுலகிரி யடைய இடிந்து தூளெழஅலையெறி யுததி குழம்ப வேல்விடுமுருகோனே

அமலைமு னரிய தவஞ்செய் பாடலவளநகர் மருவி யமர்ந்த தேசிகஅறுமுக குறமக ளன்ப மாதவர்பெருமாளே.

All songs →