Song 742
வெகுமாய விதத்துரு வாகிய
- Sthalam
- திருத்துறையூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதான தனத்தன தானனதனதான தனத்தன தானனதனதான தனத்தன தானனதனதான
Lyrics
வெகுமாய விதத்துரு வாகியதிறமேப ழகப்படு சாதகவிதமேழ்க டலிற்பெரி தாமதில்சுழலாகி
வினையான கருக்குழி யாமெனுமடையாள முளத்தினின் மேவினும்விதியாரும் விலக்கவொ ணாதெனுமுதியோர்சொல்
தகவாம தெனைப்பிடி யாமிடைகயிறாலு மிறுக்கிம காகடசலதாரை வெளிக்கிடை யேசெலவுருவாகிச்
சதிகாரர் விடக்கதி லேதிரள்புழுவாக நெளித்தெரி யேபெறுமெழுகாக வுருக்குமு பாதிகள்தவிர்வேனோ
உ ககால நெருப்பதி லேபுகையெழவேகு முறைப்படு பாவனையுறவேகு கையிற்புட மாய்விடவெளியாகி
உ லவாநர குக்கிரை யாமவர்பலவோர்கள் தலைக்கடை போயெதிர்உ ளமாழ்கி மிகக்குழை வாகவுமுறவாடித்
தொகலாவ தெனக்கினி தானறவளமாக அருட்பத மாமலர்துணையேப ணியத்தரு வாய்பரிமயில்வேலா
துதிமாத வர்சித்தர்ம கேசுரர்அரிமால்பி ரமர்க்கருள் கூர்தருதுறையூர்நக ரிற்குடி யாய்வருபெருமாளே.
