Song 727
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
- Sthalam
- சிறுவை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தந்தன தானன தானனதான தந்தன தானன தானனதான தந்தன தானன தானனதனதான
Lyrics
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்காத லின்பொருள் மேவின பாதகர்வீணில் விண்டுள நாடிய ரூமைகள்விலைகூறி
வேளை யென்பதி லாவசை பேசியர்வேசி யென்பவ ராமிசை மோகிகள்மீது நெஞ்சழி யாசையி லேயுழல்சிறியேனும்
மால யன்பர னாரிமை யோர்முனிவோர் புரந்தர னாதிய ரேதொழமாத வம்பெறு தாளிணை யேதினமறவாதே
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறியேவி ரும்பி வினாவுட னேதொழவாழ்வ ரந்தரு வாயடி யேனிடர்களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளிநாட கம்பயில் நாரணி பூரணிநீடு பஞ்சவி சூலினி மாலினியுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவகாம சுந்தரி யேதரு பாலகநீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிகமுருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெறமாநி லங்களெ லாநிலை யேதருஆய னந்திரு வூரக மால்திருமருகோனே
ஆட கம்பயில் கோபுர மாமதிலால யம்பல வீதியு மேநிறைவான தென்சிறு வாபுரி மேவியபெருமாளே.
