Song 712
சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
- Sthalam
- திருப்பேர்ருர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தானன தானன தான தானன தானனதான தானன தானனதனதான
Lyrics
சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்சேய சாயல்க லாமதிமுகமானார்
தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலைசேலு லாவிய கூர்விழிகுமிழ்நாசி
தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்சார்பி லேதிரி வேனைநினருளாலே
சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவியதாளில் வீழ வினாமிகஅருள்வாயே
காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறைகாவல் மாதினொ டாவல்செய்தணைவோனே
காண ஆகம வேதபு ராண நூல்பல வோதியகார ணாகரு ணாகரமுருகோனே
போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடுபூப சேவக மாமயில்மிசையோனே
போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழுபோரி மாநகர் மேவியபெருமாளே.
