Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 71

நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்

Thalam
ஸங்கீர்ணசாபு (4 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 ; (எடுப்பு - அதீதம்)தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்தனத்தத் தந்தனம்தனதான

Lyrics

நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்நிறத்திற் கந்தனென்றினைவொரை

நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்றரற்றித் துன்பநெஞ்சினில்நாளும்

புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்புகட்டிக் கொண்டுடம்பழிமாயும்

புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்புணர்க்கைக் கன்புதந்தருள்வாயே

மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்மறத்திற் றந்தைமன்றினிலாடி

மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்டமிழ்ச்சொற் சந்தமொன்றருள்வோனே

குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்கொழித்துக் கொண்டசெந்திலின்வாழ்வே

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்குவித்துக் கும்பிடும்பெருமாளே.

All songs →