Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 700

தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனந்தன தனந்தன தனந்தன தனந்தனதனந்தன தனந்தனதனதான

Lyrics

தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்தழைந்தவு தரந்திகழ்தசமாதஞ்

சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்தவழ்ந்தனர் நடந்தனர்சிலகாலந்

துலங்கு நலபெண்களை முயங்கினர் மயங்கினர்தொடுந்தொழி லுடன்தமக்ருகபாரஞ்

சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்சுடும்பினை யெனும்பவமொழியேனோ

இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கருளிலெங்கணு மிலங்கெனமுறையோதி

இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிடஎழுந்தருள் முகுந்தனன்மருகோனே

பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறிப்ரசண்டக ரதண்டமிழ்வயலு¡ரா

பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பியபெருங்குடி மருங்குறைபெருமாளே.

All songs →