Song 695
திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
- Sthalam
- திருமயிலை
- Raagam
- சுபபந்துவராளி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - கண்ட ஏகம் (5)தனனா தனனாதன தனனா தனனாதனதனனா தனனாதனதனதான
Lyrics
திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடுதிரிவே னுனையோதுதல்திகழாமே
தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவசுதனே திரிதேவர்கள்தலைவாமால்
வரைமா துமையாள் தரு மணியே குகனேயெனஅறையா வடியேனுமுனடியாராய்
வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடுமகநா ளுளதோசொலஅருள்வாயே
இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவருமிழிவா கிமுனேயியலிலராகி
இருளா மனதேயுற அசுரே சர்களேமிகஇடரே செயவேயவரிடர்தீர
மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழமதமா மிகுசூரனைமடிவாக
வதையே செயுமாவலி யுடையா யழகாகியமயிலா புரிமேவியபெருமாளே.
