Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 691

இகல வருதிரை பெருகிய சலநிதி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - அங்தாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான

Lyrics

இகல வருதிரை பெருகிய சலநிதிநிலவு முலகினி லிகமுறு பிறவியினினிமை பெறவரு மிடருறு மிருவினையதுதீர

இசையு முனதிரு பதமலர் தனைமனமிசைய நினைகிலி யிதமுற வுனதருளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலிஉ மைபாகர்

மகிழு மகவென அறைகிலி நிறைகிலிமடமை குறைகிலி மதியுணர் வறிகிலிவசன மறவுறு மவுனமொ டுறைகிலிமடமாதர்

மயம தடரிட இடருறு மடியனுமினிமை தருமுன தடியவ ருடனுறமருவ அருள்தரு கிருபையின் மலிகுவதொருநாளே

சிகர தனகிரி குறமக ளினிதுறசிலத நலமுறு சிலபல வசனமுதிறைய அறைபயி லறுமுக நிறைதருமருணீத

சிரண புரணவி தரணவி சிரவணசரணு சரவண பவகுக சயனொளிதிரவ பரவதி சிரமறை முடிவுறுபொருணீத

அகர உ கரதி மகரதி சிகரதியகர அருளதி தெருளதி வலவலஅரண முரணுறு மசுரர்கள் கெடஅயில்விடுவோனே

அழகு மிலகிய புலமையு மகிமையும்வளமு முறைதிரு மயிலையி லநுதினமமரு மரகர சிவசுத அடியவர்பெருமாளே.

All songs →