Song 687
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
- Sthalam
- திருவொற்றியூர்
- Raagam
- தன்யாஸி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகதிமிதக-3, தகிட-1 1/2, தக-1தனதத்தன தானதன தனதத்தன தானதனதனதத்தன தானதனதனதானா
Lyrics
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிசசுகவிப்பிர தேசரசசுபமாயா
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவிததொகைவிக்ரம மாதர்வயிறிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடிகளையெத்திடி ராகவகையதின்மீறிக்
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவகதிபெற்றிட ரானவையையொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்பிடிகைத்தல ஆதியரிமருகோனே
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணியகுணமுட்டர வாவசுரர்குலகாலா
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரையருகுற்றிடு மாதிசிவனருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்களிதயத்திட மேமருவுபெருமாளே.
