Song 683
சோதி மாமதி போல்முக முங்கிளர்
- Sthalam
- வடதிருமுல்லைவாயில்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தானன தானன தந்தனதான தானன தானன தந்தனதான தானன தானன தந்தனதனதான
Lyrics
சோதி மாமதி போல்முக முங்கிளர்மேரு லாவிய மாமுலை யுங்கொடுதூர வேவரு மாடவர் தங்கள்முனெதிராயே
சோலி பேசிமு னாளிலி ணங்கியமாதர் போலிரு தோளில்வி ழுந்தொருசூதி னால்வர வேமனை கொண்டவருடன்மேவி
மோதி யேகனி வாயத ரந்தருநாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின்மோன மாயவ மேசில சண்டைகளுடனேசி
மோச மேதரு தோதக வம்பியர்மீதி லேமய லாகிம னந்தளர்மோட னாகிய பாதக னுங்கதிபெறுவேனோ
ஆதி யேயெனும் வானவர் தம்பகையான சூரனை மோதிய ரும்பொடியாக வேமயி லேறிமு னிந்திடுநெடுவேலா
ஆயர் வாழ்பதி தோறுமு கந்துரலேறி யேயுறி மீதளை யுங்களவாக வேகொடு போதநு கர்ந்தவன்மருகோனே
வாதி னால்வரு காளியை வென்றிடுமாதி நாயகர் வீறுத யங்குகைவாரி ராசனு மேபணி யுந்திருநடபாதர்
வாச மாமல ரோனொடு செந்திருமார்பில் வீறிய மாயவ னும்பணிமாசி லாமணி யிசர்ம கிழ்ந்தருள்பெருமாளே.
