Song 680
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
- Sthalam
- திருவேற்காடு
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானந்தா தனதான தானந்தா தனதானதானந்தா தனதானதனதான
Lyrics
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோலமாளம்போர் செயுமாயவிழியாலே
ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவாரஆடம்பார் குவிநேயமுலையாலே
சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாயவேளங்கார் துடிநீபஇடையாலே
சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறுகாலந்தா னொழிவேதுஉ ரையாயோ
பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாதமாதம்பா தருசேயவயலு¡ரா
பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீரபாசந்தா திருமாலின்மருகோனே
வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்வீறங்கே யிருபாலுமுறவீறு
வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவுவேலங்கா டுறைசீலபெருமாளே.
