Song 67
தொடரிய மன்போற் றுங்கப்
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தந்தாத் தந்தத்தனதன தந்தாத் தந்தத்தனதன தந்தாத் தந்தத்தனதான
Lyrics
தொடரிய மன்போற் றுங்கப்படையைவ ளைந்தோட் டுந்துட்டரையிள குந்தோட் கொங்கைக்கிடுமாயத்
துகில்விழ வுஞ்சேர்த் தங்கத்துளைவிர குஞ்சூழ்த் தண்டித்துயர்விளை யுஞ்சூட் டின்பத்தொடுபாயற்
கிடைகொடு சென்றீட் டும்பொற்பணியரை மென்றேற் றங்கற்றனையென இன்றோட் டென்றற்கிடுமாதர்க்
கினிமையி லொன்றாய்ச் சென்றுட்படுமன முன்றாட் கன்புற்றியலிசை கொண்டேத் தென்றுட்டருவாயே
நெடிதுத வங்கூர்க் குஞ்சற்புருடரும் நைந்தேக் கம்பெற்றயர்வுற நின்றார்த் தங்கட்கணையேவும்
நிகரில்ம தன்தேர்க் குன்றற்றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச்சிறிதுநி னைந்தாட் டங்கற்றிடுவார்முன்
திடமுறு அன்பாற் சிந்தைக்கறிவிட முஞ்சேர்த் தும்பர்க்கிடர்களை யும்போர்ச் செங்கைத்திறல்வேலா
தினவரி வண்டார்த் தின்புற்றிசைகொடு வந்தேத் திஞ்சித்திருவளர் செந்தூர்க் கந்தப்பெருமாளே.
