Song 667
சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர்
- Sthalam
- வேலுர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானான தந்த தந்த தானான தந்த தந்ததானான தந்த தந்ததனதான
Lyrics
சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர்சீர்வாழ்வு சிந்தை பொன்றமுதல்நாடித்
தேன்மேவு செஞ்சொ லின்சொல் தானோதி வந்த ணைந்துதீராத துன்ப இன்பமுறுமாதர்
கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்புகூராமல் மங்கி யங்கமழியாதே
கோள்கோடி பொன்ற வென்று நாடோ று நின்றி யங்குகூர்வாய்மை கொண்டி றைஞ்சஅருள்தாராய்
மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின்வாகோட ழிந்தொ டுங்கமுதல்நாடி
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்தமாசூரர் குன்ற வென்றிமயிலேறீ
மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்கவேலாலெ றிந்து குன்றைமலைவோனே
வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சுவேலுர்வி ளங்க வந்தபெருமாளே.
