Song 660
கள்ள முள்ள வல்ல வல்லி
- Sthalam
- வெள்ளிகரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தய்ய தய்ய தய்ய தய்யதய்ய தய்யதனதான
Lyrics
கள்ள முள்ள வல்ல வல்லிகையி லள்ளிபொருளீயக்
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளுகல்வி செல்வர்கிளைமாய
அள்ளல் துள்ளி ஐவர் செல்லுமல்லல் சொல்லமுடியாதே
ஐய ரைய மெய்யர் மெய்யஐய செய்யகழல்தாராய்
வள்ளல் புள்ளி நவ்வி நல்குவள்ளி கிள்ளைமொழியாலே
மைய லெய்து மைய செய்யில்வையில் வெள்வளைகளேற
மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்வெள்ள வெள்ளிநகர்வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லைவெல்ல வல்லபெருமாளே.
