Song 65
துன்பங்கொண் டங்க மெலிந்தற
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- பைரவி
- Thalam
- திஸ்ர த்ருபுடை (7)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தந்தந் தந்தன தந்தனதந்தந்தந் தந்தன தந்தனதந்தந்தந் தந்தன தந்தனதனதான
Lyrics
துன்பங்கொண் டங்க மெலிந்தறநொந்தன்பும் பண்பு மறந்தொளிதுஞ்சும்பெண் சஞ்சல மென்பதிலணுகாதே
இன்பந்தந் தும்பர் தொழும்பதகஞ்சந்தந் தஞ்ச மெனும்படியென்றென்றுந் தொண்டு செயும்படியருள்வாயே
நின்பங்கொன் றுங்குற மின்சரணங்கண்டுந் தஞ்ச மெனும்படிநின்றன்பின் றன்படி கும்பிடுமிளையோனே
பைம்பொன்சிந் தின்றுறை தங்கியகுன்றெங்குஞ் சங்கு வலம்புரிபம்புந்தென் செந்திலில் வந்தருள்பெருமாளே.
