Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 649

தொடுத்த வாளென விழித்து மார்முலை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்த தானன தனத்த தானனதனத்த தானன தனத்த தானனதனத்த தானன தனத்த தானனதனதான

Lyrics

தொடுத்த வாளென விழித்து மார்முலையசைத்து மேகலை மறைத்து மூடிகள்துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல்கொளுமாதர்

சுகித்த ஹாவென நகைத்து மேல்விழமுடித்த வார்குழல் விரித்து மேவிதழ்துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடுவழியேபோய்ப்

படுத்த பாயலி லணைத்து மாமுலைபிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ்கடித்து நாணம தழித்த பாவிகள்வலையாலே

பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசைவெளுத்து வாய்களு மலத்தி னாயெனபசித்து தாகமு மெடுத்தி டாவுயிருழல்வேனோ

வெடுத்த தாடகை சினத்தை யோர்கணைவிடுத்து யாகமும் நடத்தி யேயொருமிகுத்த வார்சிலை முறித்த மாயவன்மருகோனே

விதித்து ஞாலம தளித்த வேதனையதிர்த்து வோர்முடி கரத்து லாயனல்விழித்து காமனை யெரித்த தாதையர்குருநாதா

அடுத்த ஆயிர விடப்ப ணாமுடிநடுக்க மாமலை பிளக்க வேகவடரக்கர் மாமுடி பதைக்க வேபொருமயில்வீரா

அறத்தில் வாழுமை சிறக்க வேயறுமுகத்தி னோடணி குறத்தி யானையொடருக்கொ ணாமலை தருக்கு லாவியபெருமாளே.

All songs →