Song 643
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
- Sthalam
- கதிர்காமம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனா தத்தனத் தனதனா தத்தனத்தனதனா தத்தனத்தனதான
Lyrics
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்சகலயோ கர்க்குமெட்டரிதாய
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்டருபரா சத்தியிற்பரமான
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்சுடர்வியா பித்தநற்பதிநீடு
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்சுகசெர்ரு பத்தையுற்றடைவேனோ
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்புருஷவீ ரத்துவிக்ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்புகழையோ தற்கெனக்கருள்வோனே
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்கனிகள்பீ றிப்புசித்தமராடிக்
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்கதிரகா மக்கிரிப்பெருமாளே.
