Song 638
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
- Sthalam
- கதிர்காமம்
- Raagam
- காம்போதி
- Thalam
- மிஸ்ரசாபு (3 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2தனத்தத் தனதான தானனதனத்தத் தனதான தானனதனத்தத் தனதான தானனதனதான
Lyrics
உடுக்கத் துகில்வேணு நீள்பசியவிக்கக் கனபானம் வேணுநல்ஒளிக்குப் புனலாடை வேணுமெய்யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்இருக்கச் சிறுநாரி வேணுமொர்படுக்கத் தனிவீடு வேணுமிவ்வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகியமயக்கக் கடலாடி நீடியகிளைக்குப் பரிபால னாயுயிரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமுமழைத்துத் தரவேணு மூழ்பவகிரிக்குட் சுழல்வேனை யாளுவதொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுகவடக்குச் சிலதூதர் நாடுககுணக்குச் சிலதூதர் தேடுகவெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதியினித்தெற் கொருதூது போவதுகுறிப்பிற் குறிபோன போதிலும்வரலாமோ
அடிக்குத் திரகார ராகியஅரக்கர்க் கிளையாத தீரனுமலைக்கப் புறமேவி மாதுறுவனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிரமளித்துற் றவர்மேல் மனோகரமளித்துக் கதிர்காம மேவியபெருமாளே.
