Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 623

அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தந்த தந்த தனன தந்த தந்ததனன தந்த தந்ததனதான

Lyrics

அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்தஅமுத புஞ்ச இன்சொல்மொழியாலே

அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொடணிச தங்கை கொஞ்சுநடையாலே

சுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்துதொடுமி ரண்டு கண்களதனாலே

துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள்துயரை யென்றொ ழிந்துவிடுவேனோ

எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பியெதிர டைந்தி றைஞ்சல்புரிபோதே

இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த தங்கமொழிய வென்ற கொண்டல்மருகோனே

மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்சமநுவி யம்பி நின்றகுருநாதா

வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்கமலைவி ளங்க வந்தபெருமாளே.

All songs →