Song 620
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
- Sthalam
- பூம்பறை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாந்ததன தான தாந்ததன தானதாந்ததன தானதனதான
Lyrics
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்வாந்தவிய மாகமுறைபேசி
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடிவாழ்ந்தமனை தேடிஉறவாடி
ஏந்துமுலை மீது சாந்துபல பூசிஏங்குமிடை வாடவிளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்ஏய்ந்தவிலை மாதர்உறவாமோ
பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதிதாஞ்செகண சேசெஎனவோசை
பாங்குபெறு தாள மேங்கநட மாடுபாண்டவர்ச காயன்மருகோனே
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசுபூங்கதலி கோடிதிகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவுபூம்பறையின் மேவுபெருமாளே.
