Song 616
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
- Sthalam
- கொங்கணகிரி
- Raagam
- மனோலயம்
- Thalam
- ஆதி - கண்டநடை (2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்ததன தத்ததன தந்ததன தத்ததனதந்ததன தத்ததனதனதான
Lyrics
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவளரந்திபக லற்றநினைவருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனைஅன்பொடுது திக்கமனமருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெறசந்திரவெ ளிக்குவழியருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்சம்ப்ரமவி தத்துடனெயருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமனமுன்றனைநி னைத்தமையஅருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரிவந்தணைய புத்தியினையருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்கொண்டுஉட லுற்றபொருளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறுகொங்கணகி ரிக்குள்வளர்பெருமாளே.
