Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 612

கோதி முடித்துக் கனத்த கொண்டையர்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தான தனத்தத் தனத்த தந்தனதான தனத்தத் தனத்த தந்தனதான தனத்தத் தனத்த தந்தனதனதான

Lyrics

கோதி முடித்துக் கனத்த கொண்டையர்சூது விதத்துக் கிதத்து மங்கையர்கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில்நினையாதே

கோழை மனத்தைக் கெடுத்து வன்புலஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்கூறு மிடத்துக் கிதத்து நின்றருள்புரிவாயே

நாத நிலைக்குட் கருத்து கந்தருள்போதக மற்றெச் சகத்தை யுந்தருநான்முக னுக்குக் கிளத்து தந்தையின்மருகோனே

நாடு மகத்தெற் கிடுக்கண் வந்ததுதீரிடு தற்குப் பதத்தை யுந்தருநாயகர் புத்ரக் குருக்க ளென்றருள்வடிவேலா

தோதிமி தித்தித் திமித்த டிங்குகுடீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமிதோதிமி தித்தித் தனத்த தந்தவெனிசையோடே

சூழ நடித்துச் சடத்தில் நின்றுயிரான துறத்தற் கிரக்க முஞ்சுபசோபன முய்க்கக் கருத்தும் வந்தருள்புரிவோனே

ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவகாரண பத்தர்க் கிரக்க முந்தகுஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுடரொளியோனே

ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கனகாபர ணத்திற் பொருட் பயன்றருஊதி கிரிக்குட் கருத்து கந்தருள்பெருமாளே.

All songs →