Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 591

துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்தனதான

Lyrics

துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக்கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத்திரிமானார்

தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத்துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத்துழலாதே

கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக்கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக்கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக்கிடையாநீ

கண்டு வேட்டுப் பொருட் கொண்டாட்டத்தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்தந்து காத்துத் திருக்கண் சாத்தப்பெறுவேனோ

வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப்பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத்துடையோனே

வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித்தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத்திளையோனே

கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக்கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற்புணர்வோனே

கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக்கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப்பெருமாளே.

All songs →