Song 589
இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
- Sthalam
- திருச்செங்கோடு
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்தனந்தாத் தனத்தம்தனதான
Lyrics
இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்றிணங்காப் பசிப்பொங்கனல்மூழ்கி
இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்கிரங்கார்க் கியற்றண்டமிழ்நூலின்
உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்துளங்காத் திடப்புன்கவிபாடி
ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்துறும்பாற் குணக்கன்புறலாமோ
கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்கணைந்தாட் கணித்திண்புயமீவாய்
கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்துசெங்கோட் டில்நிற்குங்கதிர்வேலா
அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்கவிழ்ந்தோர்க் குணற்கொன்றிலதாகி
அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்கறிந்தோர்க் களிக்கும்பெருமாளே.
