Song 587
வண்டார் மதங்க ளுண்டே மயங்கி
- Sthalam
- திருச்செங்கோடு
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தான தந்த தந்தான தந்ததந்தான தந்ததனதான
Lyrics
வண்டார் மதங்க ளுண்டே மயங்கிவந்தூரு கொண்டலதனோடும்
வண்காம னம்பு தன்கால் மடங்கவன்போர் மலைந்தவிழிவேலும்
கொண்டே வளைந்து கண்டார் தியங்கநின்றார் குரும்பைமுலைமேவிக்
கொந்தா ரரும்பு நின்தாள் மறந்துகுன்றாம லுன்றனருள்தாராய்
பண்டாழி சங்கு கொண்டாழி தங்குபண்போ னுகந்தமருகோனே
பண்சார நைந்து நண்போது மன்பர்பங்காகி நின்றகுமரேசா
செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்நின்றாடி சிந்தைமகிழ்வாழ்வே
செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்றசெங்கோ டமர்ந்தபெருமாளே.
