Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 57

சத்தமிகு மேழுகட லைத்தேனை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்ததன தானதன தத்தானதத்ததன தானதன தத்தானதத்ததன தானதன தத்தானதனதான

Lyrics

சத்தமிகு மேழுகட லைத்தேனையுற்றமது தோடுகணை யைப்போர்கொள்சத்திதனை மாவின்வடு வைக்காவிதனைமீறு

தக்கமணம் வீசுகம லப்பூவைமிக்கவிளை வானகடு வைச்சீறுதத்துகளும் வாளையடு மைப்பாவுவிழிமாதர்

மத்தகிரி போலுமொளிர் வித்தாரமுத்துவட மேவுமெழில் மிக்கானவச்சிரகி ஡ணடநிகர் செப்பானதனமீதே

வைத்தகொடி தானமயல் விட்டானபத்திசெய ஏழையடி மைக்காகவஜ்ரமயில் மீதிலினி யெப்போதுவருவாயே

சித்ரவடி வேல்பனிரு கைக்காரபத்திபுரி வோர்கள்பனு வற்காரதிக்கினுந டாவுபுர விக்காரகுறமாது

சித்தஅநு ராககல விக்காரதுட்டஅசு ரேசர்கல கக்காரசிட்டர்பரி பாலலளி தக்காரஅடியார்கள்

முத்திபெற வேசொல்வச னக்காரதத்தைநிகர் தூயவநி தைக்காரமுச்சகர்ப ராவுசர ணக்காரஇனிதான

முத்தமிழை யாயும்வரி சைக்காரபச்சைமுகில் தாவுபுரி சைக்காரமுத்துலவு வேலைநகர் முத்தேவர்பெருமாளே.

All songs →