Song 554
குமுத வாய்க்கனி யமுத வாக்கினர்
- Sthalam
- திருசிராப்பள்ளி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தாத்தன தனன தாத்தனதானா தானா தானா தானாதனதான
Lyrics
குமுத வாய்க்கனி யமுத வாக்கினர்கோலே வேலே சேலே போலேஅழகான
குழைகள் தாக்கிய விழிக ளாற்களிகூரா வீறா தீரா மாலாயவரோடே
உமது தோட்களி லெமது வேட்கையைஓணர் பாணர் வாணர் சோணர்எனவேநின்
றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தனமூடே வீழ்வே னீடே றாதேயுழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்தியதாதா வேமா ஞாதா வேதோகையிலேறீ
சயில நாட்டிறை வயலி நாட்டிறைசாவா மூவா மேவா நீவாஇளையோனே
திமிர ராக்கதர் சமர வேற்கரதீரா வீரா நேரா தோராஉமைபாலா
திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்தேவே கோவே வேளே வானோர்பெருமாளே.
