Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 549

அரிவையர் நெஞ்சுரு காப்புணர்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தந்தன தாத்தனதனதன தந்தன தாத்தனதனதன தந்தன தாத்தனதனதான

Lyrics

அரிவையர் நெஞ்சுரு காப்புணர்தருவிர கங்களி னாற்பெரிதவசம்வி ளைந்துவி டாய்த்தடர்முலைமேல்வீழ்ந்

தகிலொடு சந்தன சேற்றினில்முழுகியெ ழுந்தெதிர் கூப்புகையடியின கம்பிறை போற்படவிளையாடிப்

பரிமளம் விஞ்சிய பூக்குழல்சரியம ருங்குடை போய்ச்சிலபறவைக ளின்குர லாய்க்கயல்விழிசோரப்

பனிமுக முங்குறு வேர்ப்பெழஇதழமு துண்டிர வாய்ப்பகல்பகடியி டும்படி தூர்த்தனைவிடலாமோ

சரியையு டன்க்ரியை போற்றியபரமப தம்பெறு வார்க்கருள்தருகணன் ரங்கபு ரோச்சிதன்மருகோனே

சயிலமெ றிந்தகை வேற்கொடுமயிலினில் வந்தெனை யாட்கொளல்சகமறி யும்படி காட்டியகுருநாதா

திரிபுவ னந்தொழு பார்த்திபன்மருவிய மண்டப கோட்டிகள்தெருவில்வி ளங்குசி ராப்பளிமலைமீதே

தெரியஇ ருந்தப ராக்ரமஉருவளர் குன்றுடை யார்க்கொருதிலதமெ னும்படி தோற்றியபெருமாளே.

All songs →