Song 536
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
- Sthalam
- வள்ளிமலை
- Raagam
- ஆனந்த பைரவி
- Thalam
- ஆதி 2 களை (16)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தனதன தனதனதய்யத்த தாத்ததனதான
Lyrics
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமைகள்ளப் புலாற்கிருமிவீடு
கனலெழ மொழிக்தரு சினமென மதமிகுகள்வைத்த தோற்பைசுமவாதே
யுகஇறு திகளனலு மிறுதியி லொருபொருள்உள்ளக்க ணோக்குமறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியிலுள்ளத்தை நோக்கஅருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்வெள்ளைப்பி ராட்டிஇறைகாணா
விடதர குடிலச டிலமிசை வெகுமுகவெள்ளத்தை யேற்றபதிவாழ்வே
வகுளமு முகுளித வழைகளு மலிபுனவள்ளிக்கு லாத்திகிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகதவள்ளிக்கு வாய்த்தபெருமாளே.
