Song 527
கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
- Sthalam
- திருவேங்கடம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாந்தன தானதன தாந்தன தானதனதாந்தன தானதனதனதான
Lyrics
கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்வாங்கிய வேல்விழியும்இருள்கூருங்
கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்மாந்தளிர் போல்வடிவும்மிகநாடிப்
பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகுதீங்குட னேயுழலும்உயிர்வாழ்வு
பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்வீழ்ந்தலை யாமலருள்புரிவாயே
பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்வேங்கையு மாய்மறமினுடன்வாழ்வாய்
பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருகபாண்டிய னீறணியமொழிவோனே
வேங்கையும் வாரணமும் வேங்யு மானும்வளர்வேங்கட மாமலையிலுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமதுவேண்டவெ றாதுதவுபெருமாளே.
