Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 520

பனியின் விந்துளி போலவே கருவினுறு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தந்தன தானனா தனதனனதனன தந்தன தானனா தனதனனதனன தந்தன தானனா தனதனனதனதான

Lyrics

பனியின் விந்துளி போலவே கருவினுறுமளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர்பனைதெ னங்கனி போலவே பலகனியின்வயறாகிப்

பருவ முந்தலை கீழதாய் நழுவிநிலமருவி யொன்பது வாசல்சே ருருவமுளபதுமை யின்செயல் போலவே வளிகயிறினுடனாடி

மனவி தந்தெரி யாமலே மலசலமொடுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின்மயம யின்றொரு பாலனா யிகமுடையசெயல்மேவி

வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும்அறம றந்தக மீதுபோய் தினதினமுமனம ழிந்துடல் நாறினே னினியுனதுகழல்தாராய்

தனன தந்தன தானனா தனதனனதினன திந்தன தீததோ திகுததிகுதகுத குந்ததி தாகுதோ வெனமுழவுவளைபேரி

தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனியினமு ழங்கெழு வேலைபோ லதிரபொருசமர்மு கங்களின் மேவியே விருதுசொலுமவுணோர்கள்

சினம ழிந்திட தேர்கள் தோலரிபரிகள்குருதி யெண்டிசை மூடவே அலகைநரிசிறையி னங்களி கூரவே நகையருளிவிடும்வேலா

சிவன்ம கிழ்ந்திரு ளானைமா முகன்மருவிமனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ்திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ்பெருமாளே.

All songs →