Song 518
தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானந் தனத்ததன தானந் தனத்ததனதானந் தனத்ததனதனதான
Lyrics
தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்சீரும் பழத்தசிவம ளுறத்
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழசீவன் சிவச்சொருபமெனதேறி
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளிநாதம் பரப்பிரமவொளிமீதே
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெநாளுங் களிக்கபதமருள்வாயே
வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்மாலும் பிழைக்கஅலைவிடமாள
வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழுமானின் கரத்தனருள்முருகோனே
தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமதுதானுண் கடப்பமலரணிமார்பா
தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலைசாலுங் குறத்திமகிழ்பெருமாளே.
