Song 516
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தனா தான தானன தந்தனா தான தானனதந்தனா தான தானனதனதான
Lyrics
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவியவன்கணா ரார வாரமுமருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்வந்தியா ஆசை யேதருவிலைமாதர்
பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகுபஞ்சியே பேசி நாடொறுமெலியாதே
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவியபண்புசேர் பாத தாமரையருள்வாயே
அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்அன்றுதா னேவி வானவர்சிறைமீள
அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்அண்டர்கோ வேப ராபரமுதல்வோனே
கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடியகொன்றையா னாளு மேமகிழ்புதல்வோனே
கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவருகுன்றுதோ றாடல் மேவியபெருமாளே.
