Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 509

மகரமொ டுறுகுழை யோலை காட்டியு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தனதன தான தாத்தனதனதன தனதன தான தாத்தனதனதன தனதன தான தாத்தனதனதான

Lyrics

மகரமொ டுறுகுழை யோலை காட்டியுமழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்வரவர வரஇத ழூற லு஡ட்டியும்வலைவீசும்

மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில்வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்வளமையி லிளமையில் மாடை வேட்கையில்மறுகாதே

இகலிய பிரமக பால பாத்திரமெழில்பட இடுதிரு நீறு சேர்த்திறமிதழியை யழகிய வேணி யார்த்ததும்விருதாக

எழில்பட மழுவுடன் மானு மேற்றதுமிசைபட இசைதரு ஆதி தோற்றமுமிவையிவை யெனவுப தேச மேற்றுவதொருநாளே

ஜகதல மதிலருள் ஞான வாட்கொடுதலைபறி யமணர்ச மூக மாற்றியதவமுனி சகமுளர் பாடு பாட்டெனமறைபாடி

தரிகிட தரிகிட தாகு டாத்திரிகிடதரி கிடதரி தாவெ னாச்சிலசபதமொ டெழுவன தாள வாச்சியமுடனேநீள்

அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பலஅலகைக ளடைவுட னாடு மாட்டமுமரனவ னுடனெழு காளி கூட்டமுமகலாதே

அரிதுயில் சயனவி யாள மூர்த்தனுமணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனுமரிதென முறைமுறை யாடல் காட்டியபெருமாளே.

All songs →