Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 498

கோதிக் கோதிக் கூந்தலி லேமலர்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானத் தானத் தாந்தன தானனதானத் தானத் தாந்தன தானனதானத் தானத் தாந்தன தானனதனதான

Lyrics

கோதிக் கோதிக் கூந்தலி லேமலர்பாவித் தாகச் சாந்தணி வார்முலைகோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழிகுயில்போலக்

கூவிக் கூவிக் காண்டிசை போலவெநாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர்கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள்வருமோவென்

றோதித் தோளிற் பூந்துகி லால்முலைமூடிச் சூதிற் று஡ங்கமி லார்தெருவோடித் தேடிச் சோம்பிடு வார்சிலவிலைமாதர்

ஓருச் சேரச் சேர்ந்திடு வார்கலிசூளைக் காரச் சாங்கமி லார்சிலவோரைச் சாகத் தீம்பிடு வார்செயலுறவாமோ

வேதத் தோனைக் காந்தள்கை யால்தலைமேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடிவீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல்விடும்வேலா

வேளைச் சீறித் தூங்கலொ டேவயமாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிடமீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமைதருசேயே

நாதத் தோசைக் காண்டுணை யேசுடர்மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர்நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள்சுரமானை

ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளிமாதைக் கானிற் சேர்ந்தணை வாய்சிவஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ்பெருமாளே.

All songs →