Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 489

இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனந்தத் தத்தன தானன தானனதனந்தத் தத்தன தானன தானனதனந்தத் தத்தன தானன தானனதனதான

Lyrics

இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள்இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள்கடிதாகும்

இடும்பைப் பற்றிய தாமென மேயினர்பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர்இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள்எவரேனும்

பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள்மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள்பலஞ்செப் பித்தர மீளழை யாதவர்அவரோடே

பதந்துய்த் துக்கொடு தீமைய மாநரகடைந்திட் டுச்சவ மாகிவி டாதுனபதம்பற் றிப்புக ழானது கூறிடஅருள்வாயே

வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்சிரம்பத் துக்கெட வாளிக டாவியெமலங்கப் பொக்கரை யீடழி மாதவன்மருகோனே

மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர்குலங்கொட் டத்திகல் கூறிய மோடரைவளைந்திட் டுக்கள மீதினி லேகொலவிடும்வேலா

பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள்பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெபிளந்திட் டுப்பல மாமயி லேறியமுருகோனே

பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள்சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடுபெரும்பற் றப்புலி யூர்தனில் மேவியபெருமாளே.

All songs →