Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 454

கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தந்த தந்தனத் தான தந்தனதந்த தந்தனத் தான தந்தனதந்த தந்தனத் தான தந்தனதந்ததான

Lyrics

கங்கு லின்குழற் கார்மு கஞ்சசிமஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறுகண்கள் கொந்தளக் காது கொஞ்சுகசெம்பொனாரம்

கந்த ரந்தரித் தாடு கொங்கைகளும்ப லின்குவட் டாமெ னுங்கிரிகந்த முஞ்சிறுத் தேம லும்படசம்பைபோல

அங்க மைந்திடைப் பாளி தங்கொடுகுந்தி யின்குறைக் கால்ம றைந்திடஅண்சி லம்பொலிப் பாட கஞ்சரிகொஞ்சமேவும்

அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல்அங்கை பொன்பறிக் கார பெண்களோடண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வதென்றுபோமோ

சங்கு பொன்தவிற் காள முந்துரியங்கள் துந்துமிக் காட திர்ந்திடசந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிடஅண்டகோசம்

சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிடஇந்தி ரன்குலத் தார்பொ ழிந்திடதந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திடவந்தசூரைச்

செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழஅந்த கன்புரத் தேற வஞ்சகர்செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரிகந்தவேளே

திங்க ளொண்முகக் காமர் கொண்டவன்கொங்கை மென்குறப் பாவை யுங்கொடுசெம்பொ னம்பலத் தேசி றந்தருள்தம்பிரானே.

All songs →