Song 449
கனகசபை மேவு மெனதுகுரு நாத
- Sthalam
- சிதம்பரம்
- Raagam
- கரஹரப்ரியா
- Thalam
- ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தான தனதனன தானதனதனன தானத்தனதானா
Lyrics
கனகசபை மேவு மெனதுகுரு நாதகருணைமுரு கேசப்பெருமாள்காண்
கனகநிற வேத னபயமிட மோதுகரகமல சோதிப்பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடுவிரகுரச மோகப்பெருமாள்காண்
விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்விமலசர சோதிப்பெருமாள்காண்
சனகிமண வாளன் மருகனென வேதசதமகிழ்கு மாரப்பெருமாள்காண்
சரணசிவ காமி யிரணகுல காரிதருமுருக நாமப்பெருமாள்காண்
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொடியல்பரவு காதற்பெருமாள்காண்
இணையிலிப தோகை மதியின்மக ளோடுமியல்புலியுர் வாழ்பொற்பெருமாளே.
