Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 446

சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்

Thalam
அங்கதாளம் (8 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனத்தா தத்தத் தனனா தந்தத்தனத்தா தத்தத் தனனா தந்தத்தனத்தா தத்தத் தனனா தந்தத்தனதான

Lyrics

சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச்செயல்மேவிச்

சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக்குடிபேணிக்

குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப்படுவேனைக்

குறித்தே முத்திக் குமறா வின்பத்தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற்கழல்தாராய்

புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற்றருள்வோனே

புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத்தருள்வோனே

திருக்கா னத்திற் பரிவோ டந்தக்குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப்புணர்வோனே

சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப்பெருமாளே.

All songs →