Song 409
கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்தனதனத் தனதனத்தனதான
Lyrics
கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்கஜமுகத் தவுணனைக்கடியானை
கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்கனிவயிற் றினிலடக்கியவேழம்
அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்தமர்புரிக் கணபதிக்கிளையோனே
அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்றியைமிகுத் தறுமுகக்குமரேசா
நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்கையில்பிடித் தெதிர்நடத்திடுமீசன்
நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்கரியுரித் தணிபவற்கொருசேயே
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்துரியமெய்த் தரளமொய்த்திடவீறிச்
சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்சுடரயிற் சரவணப்பெருமாளே.
