Song 400
இருவர் மயலோ அமளி விதமோ
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட தகதிமி-3 1/2தனன தனனா தனன தனனாதனன தனனாதனதான
Lyrics
இருவர் மயலோ அமளி விதமோஎனென செயலோஅணுகாத
இருடி அயன்மா லமர ரடியாரிசையு மொலிதானிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதானொருவர் பரிவாய்மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதானுனது கிருபாகரமேதோ
பரம குருவா யணுவி லசைவாய்பவன முதலாகியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்பழைய வடிவாகியவேலா
அரியு மயனோ டபய மெனவேஅயிலை யிருள்மேல்விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவேஅருண கிரிவாழ்பெருமாளே.
