Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 398

இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தனதனன தனதான தத்த தனனா தனந்ததனன தனதனன தனதான தத்த தனனா தனந்ததனன தனதனன தனதான தத்த தனனா தனந்த.... தனதனத் தனதான

Lyrics

இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்பஅமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்கஇசலி யிசலியுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க..... வுளமகிழ்ச் சியினோடே

இருவ ருடலுமொரு வுருவாய் நயக்க முகமே லழுந்தஅளக மவிழவளை களுமேக லிக்க நயனார விந்தலகரி பெருகஅத ரமுமே யருத்தி முறையே யருந்த..... உரையெழப் பரிவாலே

புருவ நிமிரஇரு கணவாள் நிமைக்க வுபசார மிஞ்சஅவச கவசமள வியலே தரிக்க அதிலே யநந்தபுதுமை விளையஅது பரமா பரிக்க இணைதோளு மொன்றி.... அதிசுகக் கலையாலே

புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்கமனமு மனமுமுரு கியெயா தரிக்க வுயிர்போ லுகந்துபொருள தளவுமரு வுறுமாய வித்தை விலைமாதர் சிங்கி..... விடஅருட் புரிவாயே

பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்ததமர திமிரபிர பலமோக ரத்ந சலராசி கொண்டபடியை முழுதுமொரு நொடியே மதித்து வலமாக வந்து..... சிவனிடத் தமர்சேயே

பழநி மிசையிலிசை யிசையே ரகத்தில் திருவா வினன்குடியினில் பிரமபுர மதில்வாழ் திருத்த ணிகையூடு மண்டர்பதிய முதியகதி யதுநா யெனுக்கு முறவாகி நின்று..... கவிதையைப் புனைவோனே

அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபால னன்பரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகார ரென்றஅசுரர் படையையடை யவும்வே ரறுத்த அபிராம செந்தி..... லுரகவெற் புடையோனே

அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்தஇரண கரணமுர ணுறுசூர னுட்க மயிலேறு கந்தஅருணை யிறையவர்பெ ரியகோபு ரத்தில் வடபா லமர்ந்த..... ஆறுமுகப் பெருமாளே.

All songs →