Song 39
கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- காவடிச்சிந்து
- Thalam
- அங்கதாளம் (5 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்ததந்ததன தந்த தந்ததனதான
Lyrics
கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சுகண்கள்குழல் கொண்டல் என்றுபலகாலும்
கண்டுவளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்துகங்குல்பகல் என்று நின்றுவிதியாலே
பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டுபங்கயப தங்கள் தந்துபுகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்துபண்புபெற அஞ்ச லஞ்சலெனவாராய்
வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டுவம்பினைய டைந்து சந்தின்மிக்முழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கைவந்தழகு டன்க லந்தமணிமார்பா
திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டுசெஞ்சமர்பு னைந்து துங்கமயில்மீதே
சென்றசுரர் அஞ்சவென்று குன்றிடை மணம்பு ணர்ந்துசெந்தில்நகர் வந்த மர்ந்தபெருமாளே.
