Song 364
நிறைந்த துப்பிதழ் தேனுறல் நேரென
- Sthalam
- திருவானைக்கா
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனந்த தத்தன தானான தானனதனந்த தத்தன தானான தானனதனந்த தத்தன தானான தானனதந்ததான
Lyrics
நிறைந்த துப்பிதழ் தேனுறல் நேரெனமறந்த ரித்தக ணாலால நேரெனநெடுஞ்சு ருட்குழல் ஜநமுத நேரெனநெஞ்சின்மேலே
நெருங்கு பொற்றன மாமேரு நேரெனமருங்கு நிட்கள ஆகாச நேரெனநிதம்ப முக்கணர் பூணார நேரெனநைந்துசீவன்
குறைந்தி தப்பட வாய்பாடி யாதரவழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடுகுமண்டை யிட்டுடை சோராவி டாயிலமைந்துநாபி
குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்மடந்தை யர்க்கொரு கோமாள மாகியகுரங்கை யொத்துழல் வேனோம னோலயமென்றுசேர்வேன்
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலிலிருந்து லுத்தநி யோராத தேதுசொல்மானங்க ளித்திட லாமோது ரோகிதமுன்புவாலி
வதஞ்செய் விக்ரம சீராம னானிலமறிந்த திச்சர மோகோ கெடாதினிவரும்ப டிக்குரை யாய்பார் பலாகவமென்றுபேசி
அறந்த ழைத்துநு மானோடு மாகடல்வரம்ப டைத்ததின் மேலேறி ராவணனரண்கு லைத்தெதிர் போராடு நாரணன்மைந்தனான
அநங்கன் மைத்துன வேளே கலாபியின்விளங்கு செய்ப்பதி வேலா யுதாவியனலங்க யப்பதி வாழ்வான தேவர்கள்தம்பிரானே.
