Song 356
ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
- Sthalam
- திருவானைக்கா
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தானத் தானதன தானத்தானதன தானத்தனதான
Lyrics
ஆரமணி வாரைப் பீறியற மேலிட்டாடவர்கள் வாடத்துறவோரை
ஆசைமட லுர்வித் தாளுமதி பாரப்பாளித படீரத்தனமானார்
காரளக நீழற் காதளவு மோடிக்காதுமபி ராமக்கயல்போலக்
காலனுடல் போடத் தேடிவரு நாளிற்காலைமற வாமற்புகல்வேனோ
பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்சாமளக லாபப்பரியேறிப்
பாய்மதக போலத் தானொடிக லாமுற்பாடிவரு மேழைச்சிறியோனே
சூரர்புர சூறைக் காரசுரர் காவற்காரஇள வேனற்புனமேவுந்
தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்சோதிவளர் காவைப்பெருமாளே.
