Song 349
முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்
- Sthalam
- காஞ்சீபுரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
பாடல் 349 ( காஞ்சீபுரம் )தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்ததத்த தத்த தாத்ததனதான
Lyrics
முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்முற்செ மத்து மூர்க்கர்வெகுபாவர்
முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்முச்சர் மெத்த சூட்சர்நகையாலே
எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்இட்ட முற்ற கூட்டர்விலைமாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்இப்ப டிக்கு மார்க்கம்உழல்வேனோ
தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டுசிற்று டுக்கை சேட்டைதவில்பேரி
திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்செக்க டற்கு ளாழ்த்துவிடும்வேலா
கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்கத்தர் பித்தர் கூத்தர்குருநாதா
கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்கச்சி நத்தி நாட்கொள்பெருமாளே.
