Song 335
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
- Sthalam
- காஞ்சீபுரம்
- Raagam
- பஹுதாரி
- Thalam
- திஸ்ர ரூபகம் (5)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு - /3 0)தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்த்தத்தத் தத்தத்தனதான
Lyrics
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்பொய்த்தெத்துத் தத்துக்குடில்பேணிப்
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்பொற்சித்ரக் கச்சுக்கிரியார்தோய்
துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்துக்கித்துக் கெய்த்துச்சுழலாதே
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்துச்சற்றர்ச் சிக்கப்பெறுவேனோ
திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்செற்பத்ரக் கொக்கைப்பொரும்வேலா
செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்செச்சைக்கொத் தொப்பித்தணிவோனே
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்கட்கத்தத் தர்க்குப்பெரியோனே
கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்கச்சிக்குட் சொக்கப்பெருமாளே.
