Song 326
கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக்
- Sthalam
- காஞ்சீபுரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத்தனதான
Lyrics
கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக்கயற்கட்பொற் பிணைச்சித்ரத்தனமாதர்
கலைக்குட்பட் டறக்கத்திச் சலித்துக்கட் டளைச்சொற்பொய்த்திரைக்குட்பட் டறச்செத்திட்டுயிர்போனால்
எடுத்துக்கொட் டிடக்கட்டைப் படத்தெட்டத் தணற்றட்டக்கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற்றவர்போமுன்
இணக்கிப்பத் திமைச்செச்சைப் பதத்தைப்பற் றுகைக்குச்சொற்றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித்திரிவேனோ
அடைத்திட்டுப் புடைத்துப்பொற் பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட்டலைப்புப்பற் றெனச்சொற்றிட்டறுசூரை
அடித்துச்செற் றிடித்துப்பொட் டெழப்பொர்ப்புப் படக்குத்திட்டலைத்துச்சுற் றலைத்தெற்றுக்கடல்மாயப்
புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக்கயிற்கொக்கைப் படக்குத்திப்பொருவோனே
புனத்திற்பொற் குறத்திக்குப் புணர்க்கொத்தப் பசப்பெத்திப்பூணர்க்கச்சிப் பதிச்சொக்கப்பெருமாளே.
