Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 319

தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதான

Lyrics

தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந்தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந்த்ரியமாறித்

தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும்தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன்தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங்கழலாநின்

றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந்ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங்கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண்டுமியாமற்

றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்டையரவிந் தத்திற் புக்கடை தற்கென்றருள்வாயே

குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங்கதிர்நேமிக்

குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங்குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங்கதிர்வேலா

திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண்டிரையலங் கத்துப் புக்குல விச்சென்றெதிரேறிச்

சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்சிதறிநின் றொட்டிப் பொட்டெழ வெட்டும்பெருமாளே.

All songs →