Song 305
தறையின் மானுட ராசையி னால்மட
- Sthalam
- குன்றுதோறாடல்
- Raagam
- ஆரபி
- Thalam
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தானன தானன தானனதனன தானன தானன தானனதனன தானன தானன தானன தந்ததான
Lyrics
தறையின் மானுட ராசையி னால்மடலெழுது மாலருள் மாதர்கள் தோதகசரசர் மாமல ரோதியி னாலிருகொங்கையாலுந்
தளர்மி னேரிடை யாலுடை யால்நடையழகி னால்மொழி யால்விழி யால்மருள்சவலை நாயடி யேன்மிக வாடிமயங்கலாமோ
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிகளணுகொ ணாவகை நீடுமி ராசியபவன பூரக வேகிக மாகியவிந்துநாதம்
பகரொ ணாதது சேரவொ ணாததுநினையொ ணாதது வானத யாபரபதிய தானச மாதிம னோலயம்வந்துதாராய்
சிறைவி டாதநி சாசரர் சேனைகள்மடிய நீலக லாபம தேறியதிறல்வி நோதச மேளத யாபரஅம்புராசித்
திரைகள் போலலை மோதிய சீதளகுடக காவிரி நீளலை சூடியதிரிசி ராமலை மேலுறை வீரகுறிஞ்சிவாழும்
மறவர் நாயக ஆதிவி நாயகரிளைய நாயக காவிரி நாயகவடிவி னாயக ஆனைத னாயகஎங்கள்மானின்
மகிழு நாயக தேவர்கள் நாயககவுரி நாயக னார்குரு நாயகவடிவ தாமலை யாவையு மேவியதம்பிரானே.
